Friday 6 May 2011

காதல், கடவுள், அழகு, பணம்

காதல்

காதலைப் பற்றிப் பலர் பலவிதமாகச் சொல்கிறார்கள். என்னைப் பொறுத்தவரை காதல் சக்தியுள்ளது. சாதி சமயங்களை உடைக்கும் வலிமை உள்ளது. ஏற்றத் தாழ்வு தெரியாதது. இதயத்தின் ஒலி அது. உண்மை காதல் சாவில்லாதது.

காதலில் வெற்றி பெறுவது என்பது எவெரெஸ்ற் மலை உச்சியை அடைவதைப் போலத்தான். ஒரு சிலர் தான் ஏறி முடிக்கிறார்கள். பலர் பாதியிலேயே களைத்து விடுகிறார்கள். உச்சிக்கு ஏறியவர்களுக்குத் தான் அங்கிருந்து பார்க்கும் அற்புதக் காட்சி தெரிகிறது. காதல் என்றால் என்னவென்று தெரியாத ஒரு சிலர் அதைக் கொச்சைப் படுத்தி விடுகிறார்கள்.


பணம்

''Money money money
It's always sunny
In rich mans world''


காதல் இல்லாமல் வாழ்ந்து விடலாம். இந்தப் பணம் இல்லாமல் வாழவே முடியாது.அதுதானே ' பணம் இல்லாதவன் பிணம் ' என்றும் ' திரை கடலோடியும் திரவியம் தேடு 'என்றும் நம் முன்னோர்கள் சொன்னார்கள்.
பணம் மிக அவசியம். ஆனால் அதுதான் வாழ்க்கையல்ல . பணத்தால் வாங்க முடியாத பல சுகங்கள் இருக்கின்றன.
பணம் ஒரு நல்லவனிடமிருந்தால் அதனால் பல நன்மைகள் செய்ய முடியும். அதே பணம் ஒரு கெட்டவனைப் பல பாதகம் செய்ய வைக்கும். சுருக்கமாகச் சொன்னால் அதற்கு சக்தி உண்டு.

கடவுள்


கடவுள் தான் அன்பு. அன்புதான் கடவுள். பெற்றவர் கூட எங்கள் அன்பை எதி பார்த்துத் தான் எங்களை அன்பு செய்கிறார்கள். நீங்கள் ' நாசமாப் போன கடவுள்' என்று அவரை நிந்தித்த போதும் அவர் உங்களை அன்பு செய்கிறார். நீங்கள் பிறரை அன்பு செய்யும் போது அங்கே கடவுள் இருக்கிறார்.
ஏனோ சிலர் சோதனைகள் தாக்கும் போது கடவுளை நம்பாமல் அவரைத் தூற்றத் தொடங்குகிறார்கள். கடவுளால் ஆகாது மனிதனால் எப்படி ஆகும்? சிந்திக்க மறுக்கிறார்கள். கவலைக்குரிய விடயம் இது.



அழகு.

அழகு முகத்திலல்ல. இதயத்தில் இருக்கிறது. அதற்கு இலக்கணம் கிடையாது.
என்னைப் பொறுத்தவரை எவரும் அழகுடன் பிறப்பதில்லை. அதை இவ்வுலகில் சேகரித்துக் கொள்கிறார்கள். நான் அழகென நினைப்பது வாழ்க்கையில் அடிபட்டு, பலதையும் இழந்து , வரும் தடைகளை வென்று முன்னேறுபவர்கள் தான். அவர்களுக்குத் தான் உணர்வுகளை மதிக்கத் தெரியும். வாழ்க்கையின் அர்த்தம் புரியும். மற்றவர்களை அன்பு செய்யத் தெரியும். அவர்கள் மிக அழகானவர்கள்.

No comments:

Post a Comment