Friday 6 May 2011

உங்களுக்குத் தெரியுமா?


மிகப் பெரிய வைரம்
=================
இதுவரை காலத்தில் கண்டெடுக்கப் பட்ட வைரங்களில் மிகப் பெரியது 3106 காரட் அளவானது. இது தென்னாபிரிக்காவிலுள்ள பிரிமியர் வைரச் சுரங்கத்தில் 1905 ஆம் ஆண்டில் கண்டெடுக்கப் பட்டது.

மிக இளமையில் 'டாக்டர்பட்டம் பெற்றவர்
==================================== ==
ஆஸ்திரியா வைச் (Austria) சேர்ந்த கார்ல் விட்டே (Carl Witte) என்ற 12 வயதே ஆன பையன் philosophy இல் டாக்டர் பட்டம் பெற்று உலக சாதனை செய்திருக்கிறார். இவர் 1814 ஆம் ஆண்டு சித்திரை மாதம்13 ந் திகதி ஜெர்மனியிலுள்ள Glessen என்ற பல்கலைக் கழகத்தில் பட்டம் பெற்றுள்ளார்.

மிக மோசமான நடன மேனியா
==========================
1374 ஆம் ஆண்டு ஆனிமாதம் 24 ந் திகதி , ஒரு வித நரம்புப் பாதிப்பினால் (tarantism) பாதிக்கப் பட்டு ஆயிரக் கணக்கான மக்கள் தங்களை அடக்க முடியாத நிலைமையில் , ஜெர்மனியில் ஆடிய ஆட்டம் , உலக வரலாற்றில் சாதனை ஆகிவிட்டது.

மிக உரத்த சத்தம்
===============
இந்தோனேசியாவில் , 1883 ஆம் ஆண்டு ஆவணி மாதம் வெடித்தஎரிமலையின்சத்தம் 3, 100 மைல்களுக்கு அப்பால்அவுஸ்திரேலியாவில் உள்ள பேர்த் ( Perth) நகரத்தில் கேட்கப் பட்டதாம்.

மிகப் பெரிய பறவை
=================
உலகில் வாழ்ந்த பறவைகளில் பெரியது ' யானைப் பறவை' என அழைக்கப் பட்ட ஏப்யோர்னிஸ் மக்ஸ்ய்முஸ் ( Aepyornis Maximus ) என்ற இனமாகும். கிட்டத்தட்ட 1000 வருடங்களுக்கு முன்னர் இந்த இனம் முற்றாக அழிக்கப் பட்டு விட்டது. இந்தப் பறக்க முடியாத பறவை மடகஸ்காரில் வாழ்ந்த அறிகுறிகள் இருக்கிறது.
கிட்டத்தட்ட 500 கிலோ கிராம் நிறையுள்ள இந்தப் பறவை 10-11 அடி நீளமானது.

பி.கு : இந்த வருடம் சித்திரை மாதம் இந்தப் பறவையின் முட்டை இங்கிலாந்தில் 500 பௌண்ட்ஸ் க்கு ஏலத்தில் விற்பனையானது.

No comments:

Post a Comment