Friday 6 May 2011

வியக்க வைக்கும் வீதிகள் 1




வீதிகள் பலவிதம். ஆனாலும் எங்களை வியக்க வைக்கக் கூடிய , உலகிலே மிக நீண்ட சாலைகளிலும் , மிகச் சிக்கலான சந்திகளிலும், மிகவும் அகலங் குறைந்த சந்துக்களிலும், மிக அபாயகரமான வீதிகள் எனப் பெயர் பெற்ற இடங்களிலும், உயிருக்கு உத்தரவாத மில்லாத ,உடம்பில் அதிரீனலின் பாய வைக்கும் வகையில் அமைக்கப் பட்ட சில உலகப் பிரசித்தமான வீதிகளிலும் பயணம் செய்யும் வாய்ப்பு நம்மில் பலருக்கு கிடைத்திருக்காது என்று நம்புகிறேன். அத்தகைய சில விதிகளைப் பற்றி இந்தத் தொடரில் உங்களுடன் பகிர வந்துள்ளேன்.
பான் அமெரிக்கன் ஹை வே 
Pan American High Way
இதுவே உலகின் மிக நீண்ட சாலையாகும். வட அமெரிக்காவின் உச்சியிலிருந்து தென்னமெரிக்கா அடிவரை பல தேசங்களை ஊடுருவு
ம் நீளும் இந்தப் பாதை சுமார்
29, 800 மைல்கள் நீண்டது.
இந்த நெடுஞ் சாலை பல காடுகளையும், நதிகளையும், பாலை வனங்களையும் கடந்து கிட்டத் தட்ட 15,000 அடிவரை உயரத்துக்குச் செல்கிறது. இவற்றின் ஒரு சில பகுதிகளில் மட்டுமே உல்லாசப் பயணிகள் பயணிக்கிறார்கள். பல பகுதிகள் நதிப் பெருக்கெடுப்பாலும், மண் சரிவுகளாலும் பாதிக்கப் படக் கூடிய அபாயகரமான பாதையாக விருப்பதால் கால நிலைமையைப் பொறுத்தே இந்த வீதியின் பல பகுதிகளிலும் பயணம் செ
ய்ய முடியும்.



பாராளுமன்ற வீதி
Parliament Street








உலகிலே மிகக் குறைந்த அகலமுள்ள வீதியென கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்துக் கொண்ட இந்த வீதி இங்கிலாந்திலுள்ள எசெட்டர்( Exeter) என்ற நகரில் உள்ளது. இதன் அகலம் 25 அங்குலம் நீளம் 50 மீட்டர் .இந்த வீதி 1300 ஆம் ஆண்டிலிருந்து இருப்பதாகத் தெரிகிறது.

சாவுப் பாதை
Death Road (North Yangas Road)
முன்னர் வட யன்கஸ் ரோடு எனப் பெயர் கொண்ட இந்த வீதி உலகத்தில் மிக அபாயகரமான சாவுப் பாதை எனப் பெயர் பெற்று ''Death Road'' என அ
ழைக்கப் படுகிறது.பல அகோர விபத்துக்களைக் கண்ட வீதியிது. இது பொலிவிய ( Bolivia)என்ற இடத்தில் 1930 ஆம் ஆண்டு சிறைக் கைதிகளைக் கொண்டு அமைக்கப் பட்டது. அந்தக் கைதிகளில் பெரும் பாலார் இந்த வீதி அமைக்கும் போது விபத்தினால் இறந்தார்கள். தொடர்ந்து
அதில் பயணிப்பவர்கள் ஒவ்வொரு வருடமும் சுமார் 200 பேர் இறந்து கொண்டிருக்கிறார்கள்.
சுமார் 70 கிலோ மீட்டர் நீண்ட இந்த வீதி 3600 மீட்டர் உயரம் வரை வளைந்து நெளிந்து ( ஹேர் பின் வளைவுகள்) செல்கிறது.
கரணம் தப்பினால் மரணம் என்று இதைத் தான் சொல்லுவார்களோ !

























If you want to see more pictures please check thislink.
Guoliang Tunnel Road
குஒலியங் குகை வீதி

இந்த வீதி சீனாவில் உள்ளது . இது அபாயகரமான வீதியானாலும் சாவுப் பாதை போலதல்ல. மலையைத் தோண்டி அதனுள் குகை போல பாதை அமைத்து வெளிச்சத்துக்காக வெவ்வேறு வடிவிலும் அளவிலும் முப்பது ஜன்னல்கள் அமைக்கப் பட்டுள்ளது. இதில் ஆச்சரியமான விடயமென்னவென்றால், 13 கிராம வாசிகள் சேர்ந்து இந்த வீதியை 5 வருடத்தில் கட்டி முடித்திருக்கிறார்கள்.



Spooky Guoliang Tunnel











.


No comments:

Post a Comment