Friday 6 May 2011

வியக்க வைக்கும் வீதிகள் 1

வீதிகள் பலவிதம். ஆனாலும் எங்களை வியக்க வைக்கக் கூடிய , உலகிலே மிக நீண்ட சாலைகளிலும் , மிகச் சிக்கலான சந்திகளிலும், மிகவும் அகலங் குறைந்த சந்துக்களிலும், மிக அபாயகரமான வீதிகள் எனப் பெயர் பெற்ற இடங்களிலும், உயிருக்கு உத்தரவாத மில்லாத ,உடம்பில் அதிரீனலின் பாய வைக்கும் வகையில் அமைக்கப் பட்ட சில உலகப் பிரசித்தமான வீதிகளிலும் பயணம் செய்யும் வாய்ப்பு நம்மில் பலருக்கு கிடைத்திருக்காது என்று நம்புகிறேன். அத்தகைய சில விதிகளைப் பற்றி இந்தத் தொடரில் உங்களுடன் பகிர வந்துள்ளேன்.
பான் அமெரிக்கன் ஹை வே 
Pan American High Way
இதுவே உலகின் மிக நீண்ட சாலையாகும். வட அமெரிக்காவின் உச்சியிலிருந்து தென்னமெரிக்கா அடிவரை பல தேசங்களை ஊடுருவு
ம் நீளும் இந்தப் பாதை சுமார்
29, 800 மைல்கள் நீண்டது.
இந்த நெடுஞ் சாலை பல காடுகளையும், நதிகளையும், பாலை வனங்களையும் கடந்து கிட்டத் தட்ட 15,000 அடிவரை உயரத்துக்குச் செல்கிறது. இவற்றின் ஒரு சில பகுதிகளில் மட்டுமே உல்லாசப் பயணிகள் பயணிக்கிறார்கள். பல பகுதிகள் நதிப் பெருக்கெடுப்பாலும், மண் சரிவுகளாலும் பாதிக்கப் படக் கூடிய அபாயகரமான பாதையாக விருப்பதால் கால நிலைமையைப் பொறுத்தே இந்த வீதியின் பல பகுதிகளிலும் பயணம் செ
ய்ய முடியும்.

பாராளுமன்ற வீதி
Parliament Street

உலகிலே மிகக் குறைந்த அகலமுள்ள வீதியென கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்துக் கொண்ட இந்த வீதி இங்கிலாந்திலுள்ள எசெட்டர்( Exeter) என்ற நகரில் உள்ளது. இதன் அகலம் 25 அங்குலம் நீளம் 50 மீட்டர் .இந்த வீதி 1300 ஆம் ஆண்டிலிருந்து இருப்பதாகத் தெரிகிறது.

சாவுப் பாதை
Death Road (North Yangas Road)
முன்னர் வட யன்கஸ் ரோடு எனப் பெயர் கொண்ட இந்த வீதி உலகத்தில் மிக அபாயகரமான சாவுப் பாதை எனப் பெயர் பெற்று ''Death Road'' என அ
ழைக்கப் படுகிறது.பல அகோர விபத்துக்களைக் கண்ட வீதியிது. இது பொலிவிய ( Bolivia)என்ற இடத்தில் 1930 ஆம் ஆண்டு சிறைக் கைதிகளைக் கொண்டு அமைக்கப் பட்டது. அந்தக் கைதிகளில் பெரும் பாலார் இந்த வீதி அமைக்கும் போது விபத்தினால் இறந்தார்கள். தொடர்ந்து
அதில் பயணிப்பவர்கள் ஒவ்வொரு வருடமும் சுமார் 200 பேர் இறந்து கொண்டிருக்கிறார்கள்.
சுமார் 70 கிலோ மீட்டர் நீண்ட இந்த வீதி 3600 மீட்டர் உயரம் வரை வளைந்து நெளிந்து ( ஹேர் பின் வளைவுகள்) செல்கிறது.
கரணம் தப்பினால் மரணம் என்று இதைத் தான் சொல்லுவார்களோ !

If you want to see more pictures please check thislink.
Guoliang Tunnel Road
குஒலியங் குகை வீதி

இந்த வீதி சீனாவில் உள்ளது . இது அபாயகரமான வீதியானாலும் சாவுப் பாதை போலதல்ல. மலையைத் தோண்டி அதனுள் குகை போல பாதை அமைத்து வெளிச்சத்துக்காக வெவ்வேறு வடிவிலும் அளவிலும் முப்பது ஜன்னல்கள் அமைக்கப் பட்டுள்ளது. இதில் ஆச்சரியமான விடயமென்னவென்றால், 13 கிராம வாசிகள் சேர்ந்து இந்த வீதியை 5 வருடத்தில் கட்டி முடித்திருக்கிறார்கள்.

Spooky Guoliang Tunnel

.

ஏன் இந்த பாரபட்சம்?

என் பிரிய மகள் பிரியங்காவை -நான்
பிரசவித்த நாள் தொடங்கி- அவள்
செய்து விட்ட சில்மிசங்கள்
மெய்யாகவே நினைவிருக்கு.

முத்துப்போல் ஒரு பல் வந்ததும்
முதற்சொல் 'மூவா' என்பதும்-அவள்
முதலடி யெடுத்து வைத்ததும்
குறிப்பெடுத்து வைத்திட்டேன்.

காலம் பறந்து விட்டது
குடும்பம் பெருகி விட்டது
சேர்ந்து வந்த சுமைகள் எல்லாம்-என்
சிந்தை நிறைந்து நின்றது.

கிடு கிடுவென படியிறங்கும்
சுட்டி மகள் அனிதாவை
திடுக்கிட்டுப் பார்க்கிறேன்-இவள்
நடக்கத் தொடங்கியதறியாமல்.

சிற்பமாய் உன்னுருவம் ..

நீ சொல்லாத வார்த்தைகள்
சொன்ன அர்த்தங்கள் அதிகம்
நீ சொல்லித் தீர்த்தவை
என் நெஞ்சிலே தஞ்சம் .

உன்னை மறக்க நினைத்தால்
என்னை வெறுக்குது நெஞ்சம்
உன்னை வெறுக்க முனைந்தால்
முள்ளாய்க் குத்துது மஞ்சம்.

அற்பமாய் எனை நினைத்து
நீ கொட்டிய வார்த்தைகள்
என் இதயத்தில் உளியாகி
சிற்பமாய் உன்னுருவம் .

விடிந்து விடும் !!!!

தினமும் ஒரு ஊடல்
தீராத கோபங்கள்
முள்ளான படுக்கையிலே
முதுகு காட்டிப் படுக்கின்றோம்!

நீ திரும்ப மாட்டாயா ?
நித்தமும் நான் தவிக்க
உன் மனமும் அப்படியே
உருகுவது தெரிகிறது.

ஏக்கங்கள் ஆட்கொள்ள
எதிர் பார்த்து எதிர் பார்த்து
முத்தான இரவுகள்
முழுதாக விடிந்து விடும் !!

கண் பார்வையற்றோர் தங்கள் நாவினால் பார்க்கலாம்!

சமீபத்தில் வெளியான மருத்துவ தொழில்நுட்பக்கண்டுபிடிப்பு.

அவுஸ்திரேலியாவில் , மெல்போர்ன் நகரில் ,ஒரு மருத்துவ ஆய்வுக் குழுவொன்று கண் பார்வையற்றவர்கள் தங்கள் நாவினால் ' பார்க்கும்' வகையில் ஒரு மின் உபகரணத்தை வடிவமைத்துள்ளனர்.

இந்த அசாதாரண தொழில் நுட்பக் கருவி 'ப்ரைன்போர்ட் விசன் டிவைஸ் ' ( BrainPort vision device ) என்று அழைக்கப் படுகிறது. இக்கருவி பார்வைக்கு மிகச் சாதாரணமாக , ஒரு சிறிய கையிலடங்கும் கொண்ட்ரோல் கோலையும் ( control unit) ஒரு கறுப்புக் கண்ணாடியையும் ( pair of sunglasses) அதனுடன் இணைக்கப் பட்ட ஒரு பிளாஸ்டிக் இணைப்பையும் அதன் முடிவில் அமைந்த ஒரு லொலிப்பொப் ( lollipop) இனிப்பு வடிவில் அமைந்த பிளாஸ்டிக் அமைப்பையும் கொண்டுள்ளது.

சுமார் 2.5 cm விட்டமுள்ள மிகச் சிறிய கேமரா ( digital video camera) கறுப்புக் கண்ணாடியின் மத்தியில் பதிக்கப் பட்டுள்ளது. ஒருவர் இதனை அணியும் போது காட்சிகள் காமெராவினால் பதிவெடுக்கப் பட்டு கையினால் இயக்கப் படும் control கோலுக்கு அனுப்பப் படுகிறது. இது கிட்டத் தட்ட ஒரு கைத் தொலைபேசி யளவில் இருக்கிறது. இங்கே பதிவான காட்சிகள் மின்னதிர்வுகளாக மாற்றப் பட்டு, பிளாஸ்டிக் இணைப்பின் மூலமாகவும், இறுதியில் நாவின் மேல் வைக்கப் படும் லொலிப் பொப் உபகரணம் மூலமாக உணரப் படுகின்றன. இந்த மெல்லிய உணர்வுகள் நரம்பின் மூலம் மூளையைச் சென்றடையும் போது அவர்கள் காட்சிகளைக் காண முடிகிறது.

கிட்டத்தட்ட 20 மணி நேரப் பயிற்சியில் இந்தக் கருவியை ஒருவர் பாவிக்கும் முறையை முற்றாக அறிந்து கொள்ள முடியுமென்று அறிந்துள்ளனர். ஒரு பார்வை அற்றவர் மூலம் இந்தக் கருவியை முதலில் சோதனை செய்தபோது முதல் முதலாக எழுத்துக்களைப் பார்த்து ஆனந்தக் கண்ணீர் வடித்தாராம். அத்தோடு இந்த கொன்றோல் கோல் காட்சிகளை பெரிதாக்கவும் (zoom)வெளிச்சத்தைக் குறைக்கவும் அதிகரிக்கவும் வசதியளிக்கிறது.

இந்த மகத்தான கண்டு பிடிப்புக்குப் பொறுப்பான ஆய்வினர் , பார்வையற்றவர்கள் தங்களைச் சுற்றியுள்ள சூழலை அறிவதற்கும், மற்றவர் உதவியில்லாமல் நடமாடவும், போகும் திசைகளையும் ஊர்களின் பெயர்களையும் படிப்பதற்கும் உதவியாகயிருக்கும் என்றும் , இந்தக் கருவியை உபயோகித்து புத்தகம் படிப்பது அவசியமில்லை என்று சொல்கிறார்கள்.

அவர்கள் அறிக்கையின் படி இக்கருவி மிக விரைவில் விற்பனைக்கு வருமென்று தெரிகிறது. இக் கருவி கண் பார்வையற்றவர்களின் தன்னம்பிக்கையையும் , தற்பாதுகாப்பையும் அதிகரிக்கும் ஒரு மிகப் பெரிய வரப் பிரசாதம் என்று நான் கருதுகிறேன்.

வியக்க வைத்த மனிதர்.' Miracle Man '

அண்மையில் மெயிலில் எனக்கு வந்த இந்தக் கதையைஉங்களுடன் பகிர்ந்து கொள்ளத் தோன்றியது.

1995 ஆம் ஆண்டு பெங் ஷுளின் ( Peng Shulin ) என்ற ஒரு சீனர் மேல் ஒரு லாரி மோதியதால் அவரது உடல் இரண்டாக வெட்டப் பட்டது. இப்படியான பாரிய விபத்திலிருந்து அவர் உயிர் பிழைத்தது விந்தையானது. 20 டாக்டர்கள் சேர்ந்த குழுவொன்று போராடி அவர் உயிரைக் காப்பாற்றினார்கள். அவர் தலையில் இருந்து எடுக்கப் பட்ட தோல் பரிசோதனைச் சாலையில் வளர்க்கப் பட்டு வெட்டுப்பட்ட உடல் பாகங்கள் மூடப் பட்டன. அவர் ஆபரேசன்தியேட்டருக்குப் போய் வந்த எண்ணிக்கை கணக்கிலடங்காதது.

இத்தனை முயற்சிகளால் உயிர் பிழைத்த அந்த மனிதரின் உயரம் 78 cm ( இரண்டரை அடி ) மட்டுமே. அன்றிலிருந்து படுக்கையில் வாழ்ந்த இந்த துரதிஸ்ட மனிதர் சாதாரண வாழ்க்கை வாழ முடியுமென்று எவரும் கனவு கூடக் கண்டிருக்க முடியாது. ஆனால் அவர் தன்னம்பிக்கை யிழக்கவில்லை. தனது கைகள் பலம் பெறும் வண்ணம் தேகாப்பியாசம் செய்யத் தொடங்கினார். தனது அன்றாடத் தேவைகளை முடிந்த அளவில் தானே செய்ய முனைந்தார். பல் துலக்குவது , முகங் கழுவுவது போன்றவற்றை அவரே செய்தார்.

இவரது விடா முயற்சி பற்றியறிந்த சீன புனர் வாழ்வு ஆய்வுக் கழகம் இவரை நடக்க வைக்கும் முயற்சி யிலிறங்கியது. எவருதவியுமில்லாமல் நடக்கும் வகையில் வடிவமைக்கப் பட்ட உபகரணமொன்று கண்டு பிடிக்கப் பட்டது. ஒரு முட்டை வடிவில் அமைக்கப் பட்ட ஒரு உறையினால் உடம்பின் கீழ்ப் பாகம் தாங்கப் பட்டு , அதனுடன் இரண்டு பயோனிக் கால்கள் ( bionic legs ) பொருத்தப் பட்டன. பலரையும் பிரமிக்க வைத்து இந்த மனிதர் அடியெடுத்து நடப்பதைப் படத்தில் பாருங்கள்.

பன்னிரண்டு வருடங்கள் கட்டிலில் வாழ்ந்த இந்த மனிதர் 2007 ஆம் ஆண்டு நடை பயில்வதைப் பார்த்து வியக்காமலிருக்க முடியவில்லை. இதை மருத்துவ தொழில் நுட்ப விந்தை என்று மட்டும் கருதி விட முடியாது. அந்த மனிதர் முகத்தில் தெரியும் பிரகாசமும், தன்னம்பிக்கையும், உற்சாகமும் .......அந்த மனவலிமைதான் முக்கிய காரணமென்பதை எனக்குச் சொல்லாமல் சொல்கிறது.
சின்னச் சின்னத் தோல்விகளைத் தாங்க முடியாமல் துவண்டுவிடும் போதெல்லாம் இந்தக் கதை எனக்கு நினைவில் வரவேண்டுமென்று தோன்றுகிறது. உங்களுடன் இதைப் பகிர்ந்ததில் பெரும் மகிழ்ச்சி.
ஆதாரம் : http://www.metro.co.uk/weird/56500-miracle-man-walks-again

கோபம்

ஒரு போதகர் தன் சீடர்களிடம் ஒருநாள் '' நீங்கள் கோபப்படும் போது ஏன் உரத்துக் கத்துகிறீர்கள்? என்று எப்போதாவது சிந்தித்தீர்களா? '' என்று கேட்டார். சில நிமிடங்களின் பின்னர் ஒருவர் '' நாங்கள் கோபப் படும்போது எங்கள் அமைதியை இழக்கிறோம். அதனால் தான் சத்தமாகக் கத்துகிறோம் '' என்று சொன்னார்.
போதகர் அந்தப் பதிலை ஏற்றுக் கொள்ளவில்லை. '' நீங்கள் அமைதியை இழந்தாலும் கேட்பவர் பக்கத்தில் இருக்கும் போது நீங்கள் அவர் காது கிழியக் கத்துவது ஏன்? ஏன் நீங்கள் அதே விடயத்தை கத்தாமல் , மெல்லிய குரலில் சொல்லக் கூடாது ?'' என்று திரும்பவும் கேட்கிறார். எவருக்கும் சரியான பதில் தெரியவில்லை.
அவர் தந்த விளக்கம் இதுதான் . இரண்டு பேர் ஒருவரோடு ஒருவர் கோபப்படும் போது அவர்களது மனங்கள் ஒன்றிலிருந்து ஒன்று விலகித் தூரத்தில் போகின்றன. அதனால்தான் அந்தத் தூரத்தைத் தாண்டி நீங்கள் சொல்லும் சொற்கள் மற்றவரைச் சென்றடைய எங்களையறியாமல் எங்கள் குரலை உயர்த்துகிறோம். எங்கள் கோபம் அதிகரிக்க , அதனால் மனங்களின் இடைவெளி மேலோங்க , அதற்கேற்ப எமது குரலும் மேலோங்குகிறது.

இருவர் ஒருவரை ஒருவர் காதலிக்கும் போது என்ன நடக்கிறது? இதற்கு எதிர்மாறாக அவர்கள் மனங்கள் நெருங்கிப் போகின்றன. அதனால் தான் அவர்கள் மெதுவான குரலில் பேசுகிறார்கள். இன்னும் நெருங்கிப் போனதும் அது கிசு கிசுப்பாக மாறி விடுகிறது. காதல் முற்றிப் போய் விட்டால் அங்கு வார்த்தைகளே தேவையில்லாமல் போய் விடுகிறது. மௌனமே ஒரு மொழியாகி விடுகிறது . இது அவர்கள் மனங்களின் நெருக்கத்தைக் காட்டுகிறது.

என்ன அழகான விளக்கம் இதுநீங்கள் ஆத்திரப்பட்டுப்பேசும்போது மற்றவர் மனங்களைத் தூரத்தில் விலக்கும்வார்த்தைகளை பாவிக்காதீர்கள்.