Friday 6 May 2011

வியக்க வைக்கும் வீதிகள் 2





Skippers Road

இந்த வீதி நியுசிலாந்தில் உள்ளது .மிகவும் அகலம் குறைந்த இந்தவீதி மலைப்பாறையில் பல திடீர் வளைவுகளுடன் செல்கிறது.இந்தப் பாதையில் இரண்டுவாகனங்கள் ஒன்றையொன்று கடப்பதுமிகவும் கடினம்பாதையோர பள்ளத்தாக்குகள் மிகவும்அபாயகரமானவைஓட்டுனர் சிறிது கவனம் குறைந்தாலும்உயிர்தப்ப முடியாதுகிட்டத்தட்ட இந்தப் பாதையை அமைக்க 22வருடங்கள்எடுத்ததுஅத்துடன் இந்தப் பாதை சீனாவை சார்ந்தவேலையாட்களால் கட்டிமுடிக்கப் பட்டதென்பது குறிப்பிடத்தக்கது.


Winter Road


உலகில் பல இடங்களில் , நதிகளின் மேல் உறைந்த பனிப்படலத்தின் மேல் பாதைகள் அமைப்பது ( Ice Roadsவழிமுறையில்இருந்தாலும் கனடாவிலிருக்கும் இந்த வீதி மிகப்பிரபலமானது.இதுவே உலகில் மிக நீண்ட ஐஸ் விதியாகும்இந்தவீதி கனடாவின் வடக்குப்பகுதியை கிழக்குப் பகுதியுடன்இணைக்கின்றது.பனிக் காலத்தில்இப்பகுதியிலுள்ள ஏரிகளும்,நதிகளும் பனிக் கட்டியாகி ஒரு படலமாக உறைந்துவிடுவதால் ,வருடத்தில் சுமார் இரண்டு மாதங்களுக்கு போக்குவரத்தைஉண்டுபண்ண , கிட்டத்தட்ட பூச்சியத்திலிருந்து 30 தொடக்கம் 70டிகிரி பரனைற் கீழுள்ள கடுங் குளிரில் மனிதர்களால் இந்தப் பாதைஅமைக்கப் படுகின்றது . இந்தப் பாதைமுக்கியமாக வடக்கில்எடுக்கப் படும் விலை மதிப்புள்ள உலோகங்களையும்,ரத்தினங்களையும் கிழக்குக்குக் கொண்டு வரவே முதலில்அமைக்கப் பட்டது.ஆனால் இப்போது பனிக் காலத்தில் அமைக்கப்படும் இந்தப் பாதையில் வடக்குப்பகுதிக்கு உணவுகளும் ,மற்றும்அத்தியாவசிய பொருட்களும் குறைந்த செலவில்எடுத்துச்செல்லப் படுகின்றனமற்றைய பத்து மாதங்களிலும்இப்பகுதிக்குபோக்கு வரத்து விமானப் பாதை மட்டுமே.






ஜனவரி மாதம் 2000 ஆண்டு டீஸல் கொண்டு சென்ற ஒரு பாரியவண்டியொன்றுமச்கேன்சி நதியில் மூழ்கியது .அதிஸ்டவசமாகவாகன ஓட்டுனர் காப்பாற்றப்பட்டார்இது வரை சுமார் 20 க்குஉட்பட்ட விபத்துக்கள் இந்த வீதியில் நடைபெற்றாலும் எந்தஉயிரிழப்பும் இந்தப் பாதையில் நடை பெறாததுஇதன்மகிமையாகும்.



Sichuan Tibet High way





ஆதாரம்

சீனாவிலுள்ள இந்த வீதி செங்க்டு ( Chengdu) என்ற இடத்திலிருந்துTibet (திபெத் )வரை நீள்கிறதுஇந்த வீதியில் நடைபெறும் மண்சரிவுகளும் , மலைகளிலிருந்து உருண்டு விழும் கற்களும்,வெள்ளப் பெருக்கெடுப்புகளும் சீனாவில் வாகன விபத்துகளின்பெரும் பங்கை வகிக்கின்றது2412 கிலோ மீட்டர் நீளமான இந்தவீதி சுமார் 4000-5000 மீட்டர் உயரமான 14 மலைகளையும்பலநதிகளையும்அபாயகரமான காடுகளையும் கடந்து செல்கின்றது.இதில் பயணிப்பவர்கள் மிக அற்புதமான காட்சிகளை ரசிக்கக்கூடியதாயிருக்கும்மொத்த வீதியையும் கடந்து செல்ல சுமார் 15நாட்கள் செல்லும்பயணிகள் இந்த 15 நாட்களில் பலவிதமானகாலநிலையுள்ள பிரதேசங்களைக் கடந்து செல்வார்கள்அவர்கள்கண் முன்னாலே வெப்பநிலை குறைந்து ,இலையுதிர் காலம் வந்துபனி கொட்டும் கடும் குளிர் பிரதேசமாகிப் போவதைப் பார்ப்பதுமிகவும் ஒரு அற்புதமான அனுபவமாக விருக்கும்.




வீதிகள் பலவிதம். ஆனாலும் எங்களை வியக்க வைக்கக் கூடிய , உலகிலே மிக நீண்ட சாலைகளிலும் , மிகச் சிக்கலான சந்திகளிலும், மிகவும் அகலங் குறைந்த சந்துக்களிலும், மிக அபாயகரமான வீதிகள் எனப் பெயர் பெற்ற இடங்களிலும், உயிருக்கு உத்தரவாத மில்லாத ,உடம்பில் அதிரீனலின் பாய வைக்கும் வகையில் அமைக்கப் பட்ட சில உலகப் பிரசித்தமான வீதிகளிலும் பயணம் செய்யும் வாய்ப்பு நம்மில் பலருக்கு கிடைத்திருக்காது என்று நம்புகிறேன். அத்தகைய சில விதிகளைப் பற்றி இந்தத் தொடரில் உங்களுடன் பகிர வந்துள்ளேன்.
பான் அமெரிக்கன் ஹை வே 
Pan American High Way
இதுவே உலகின் மிக நீண்ட சாலையாகும். வட அமெரிக்காவின் உச்சியிலிருந்து தென்னமெரிக்கா அடிவரை பல தேசங்களை ஊடுருவு
ம் நீளும் இந்தப் பாதை சுமார்
29, 800 மைல்கள் நீண்டது.
இந்த நெடுஞ் சாலை பல காடுகளையும், நதிகளையும், பாலை வனங்களையும் கடந்து கிட்டத் தட்ட 15,000 அடிவரை உயரத்துக்குச் செல்கிறது. இவற்றின் ஒரு சில பகுதிகளில் மட்டுமே உல்லாசப் பயணிகள் பயணிக்கிறார்கள். பல பகுதிகள் நதிப் பெருக்கெடுப்பாலும், மண் சரிவுகளாலும் பாதிக்கப் படக் கூடிய அபாயகரமான பாதையாக விருப்பதால் கால நிலைமையைப் பொறுத்தே இந்த வீதியின் பல பகுதிகளிலும் பயணம் செ
ய்ய முடியும்.



பாராளுமன்ற வீதி
Parliament Street








உலகிலே மிகக் குறைந்த அகலமுள்ள வீதியென கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்துக் கொண்ட இந்த வீதி இங்கிலாந்திலுள்ள எசெட்டர்( Exeter) என்ற நகரில் உள்ளது. இதன் அகலம் 25 அங்குலம் நீளம் 50 மீட்டர் .இந்த வீதி 1300 ஆம் ஆண்டிலிருந்து இருப்பதாகத் தெரிகிறது.

சாவுப் பாதை
Death Road (North Yangas Road)
முன்னர் வட யன்கஸ் ரோடு எனப் பெயர் கொண்ட இந்த வீதி உலகத்தில் மிக அபாயகரமான சாவுப் பாதை எனப் பெயர் பெற்று ''Death Road'' என அ
ழைக்கப் படுகிறது.பல அகோர விபத்துக்களைக் கண்ட வீதியிது. இது பொலிவிய ( Bolivia)என்ற இடத்தில் 1930 ஆம் ஆண்டு சிறைக் கைதிகளைக் கொண்டு அமைக்கப் பட்டது. அந்தக் கைதிகளில் பெரும் பாலார் இந்த வீதி அமைக்கும் போது விபத்தினால் இறந்தார்கள். தொடர்ந்து
அதில் பயணிப்பவர்கள் ஒவ்வொரு வருடமும் சுமார் 200 பேர் இறந்து கொண்டிருக்கிறார்கள்.
சுமார் 70 கிலோ மீட்டர் நீண்ட இந்த வீதி 3600 மீட்டர் உயரம் வரை வளைந்து நெளிந்து ( ஹேர் பின் வளைவுகள்) செல்கிறது.
கரணம் தப்பினால் மரணம் என்று இதைத் தான் சொல்லுவார்களோ !

























If you want to see more pictures please check thislink.
Guoliang Tunnel Road
குஒலியங் குகை வீதி

இந்த வீதி சீனாவில் உள்ளது . இது அபாயகரமான வீதியானாலும் சாவுப் பாதை போலதல்ல. மலையைத் தோண்டி அதனுள் குகை போல பாதை அமைத்து வெளிச்சத்துக்காக வெவ்வேறு வடிவிலும் அளவிலும் முப்பது ஜன்னல்கள் அமைக்கப் பட்டுள்ளது. இதில் ஆச்சரியமான விடயமென்னவென்றால், 13 கிராம வாசிகள் சேர்ந்து இந்த வீதியை 5 வருடத்தில் கட்டி முடித்திருக்கிறார்கள்.



Spooky Guoliang Tunnel











.



இணையத்தில் நான் கண்ட அசாதாரணக் கட்டிடங்கள்

Wonderworks-Upside down Museum
Orlando/Florida


Pickle Barrel House
(Grand Marais/Michigan/United States)


Habitat 67
( Montreal/ Canada)






House on the bridge
Vernon/ France


Hospital bedpan shaped house
In the Alps


Mammy's Cupboard
(Natchez/United States)




Stone House
Portugal




.

நம்புங்கள் -இது உண்மை

இந்தியாவைச் சேர்ந்த சஞ்சு என்ற மனிதர் பிறந்ததிலிருந்து ஒரு பெரிய வயிற்றுடன் தான் இருந்தார். ஆனால் காலம் செல்லச் செல்ல அதன் அளவு பெரிதாகிக் கொண்டே போனது. 1999 ஆம் ஆண்டு அவரது 36 ஆவது வயதில், மூச்சு எடுக்க முடியாத நிலைமையில் இவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப் பட்டார். இவரைப் பரிசோதித்த டாக்டர்கள் இது அவர் வயிற்றில் வளரும் ஒரு பெரிய கட்டியினால் என்று அனுமானித்தார்கள். அந்தக் கட்டி வளர்ந்து பிரிமென் தகட்டை அமுக்குவதால் அவரால் மூச்செடுக்க முடியவில்லை என்றும் தீர்மானித்தார்கள். இதனால் அக்கட்டியை அகற்ற அவசரச் சத்திர சிகிச்சை ஏற்பாடானது.


இந்த
 சத்திர சிகிச்சையைச் செய்த டாக்டர் Mehta ஒரு மருத்துவ விந்தையைக் கண்டார். அவரது வயிற்றிலிருந்து இரண்டு கால்கள், பல எலும்புகள், கைகள் ,நீண்ட நகங்களுடன் விரல்கள் , என பல உடல் பாகங்களை அகற்றினார்கள்.
அவரது இரட்டைப் பிறவி ( twin brother) பிறப்பிலிருந்தே அவர் வயிற்றில் ஒரு ஒட்டுண்ணியாக வளர்ந்த விந்தை அதன் பின்னர் தெரிய வந்தது. உலகத்தில் இப்படியான சம்பவங்கள் பல இடங்களில் இதற்கு முன்னரே நடந்திருந்தாலும் இத்தனை வருடங்களுக்குப் பின்னர் அறிய வந்தது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. இப்படியான கற்பங்கள் 500,000 க்கு ஒன்றுதான் நடக்கும் சாத்தியக் கூறுகள் உள்ளனவாம்.

இவ்வாறாக ஒரு கருவைச் சுற்றி மற்றைய கரு வளரும் நிலையை '' Fetus in fetu'' என்று அழைக்கிறார்கள்.


நாகரீகமென்ற அநாகரீகம் ( Adults only )
அண்மையில் பத்திரிகையில் நான் படித்த செய்தியொன்று என்னை அதிர வைத்தது. பெண்கள் தினத்தையொட்டி பலரும் ஆணாதிக்கம் பற்றியும், பெண் அடிமைத்தனம் பற்றியும் சக்கை போடு போடும் இந்த நேரத்தில் இந்தப் பதிவு அவசியம் தேவையென்றும் தோன்றியது. என்னைப் போலவே பலரும் இந்த விடயத்தை முதன் முதலாக அறிந்து மிரண்டு போகலாம். நாகரீகம் என்ற பெயரில் பல வளமான நாடுகளில் நடைபெறும் இந்த அநாகரீகங்கள் நாங்கள் ஒரு கலிகாலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதைத் தெட்டத் தெளிவாகக் கூறுகிறது.
ஜப்பானிய உணவான சூஷி ( Sushi) பற்றியறிவீர்களா? சில பிரபல நட்சத்திர ஹோடேல்களில் இந்த உணவு , கிட்டத்தட்ட நிர்வாணமான பெண்ணின் உடல்மேல் பரிமாறப் படுகிறது. ஜப்பானில் பல வருடங்களுக்கு முன்பாகவே இந்த வழக்கம் இருந்தாலும் சரியாக எப்போ இந்தக் காட்டு மிராண்டித் தனம் ஆரம்பித்ததென்பது தெரியவில்லை. இதற்கு காரணமாக Sushiஉடல் வெப்ப நிலையில் பரிமாறப் படும் போது அதன் உருசி பேணப் படுவதாகச் சொல்கிறார்கள். ஜப்பானில் தொடங்கிய இந்த வியாதி இப்போ நாகரீகமாக மேற்கத்திய நாடுகளுக்கும் பரவி விட்டது. நான் படித்த செய்தி இங்கிலாந்தில் ஆரம்பிக்கப் பட்ட இத்தகைய ஹோட்டல் பற்றியதுதான் .




பேரழகுள்ள மாடல்கள் இந்த வகையில் தங்களைத் தாழ்த்தி ,கேவலம் எச்சி இலையாகி பெண்மையை விலை பேசி விற்கிறார்கள். இதற்காகவே அந்த ஹோடேல்களைத் தேடிச் செல்லும் கேடுகெட்ட பணக் காரக் கும்பல் இந்த உணவைப் பெண்ணுடலில் பரிமாற பத்து மடங்கு அதிகமாகப் பணம் செலுத்துகிறார்கள்.

இதை எதிர்த்துப் போராடும் பல பெண்ணினவாதிகள் இந்த வழக்கத்தை நிறுத்த முயன்றாலும் ரகசிய அறிவித்தல்களோடு வெவ்வேறு நட்சத்திர ஹோடேல்களில் இந்த கேளிக்கை விருந்து நடந்து கொண்டுதான் இருக்கிறது.

சீனா மட்டும் இதனை எதிர்த்து சட்டம் கொண்டுவந்து, முற்றாக ஜப்பானிய நிர்வாண Sushi ஹோடேல்களைக் களைந்தெறிந்துள்ளது . மற்றைய நாடுகள் சீனாவைப் பின் தொடர்ந்து எப்போ இதனை சட்ட விரோதமாக்கப் போகிறார்கள் என்று தெரியவில்லை.

(ஒரு நண்பர் தந்த கருத்தினை ஏற்று இங்கே நான் பிரசுரித்த சில படங்களை அகற்றி அதற்கான இணைப்புகளைத் தந்திருக்கிறேன்.)

http://en.wikipedia.org/wiki/Nyotaimori

http://images.google.co.uk/imgres?imgurl=http://i.dailymail.co.uk/i/pix/2008/10_06/SushiBodyMPA_650x4

மீண்டு வந்த ஆலயம்


1960 ஆம் ஆண்டு கட்டலோனியா ( Catalonia) என்ற நகரில் ஏற்பட்ட வரட்சியைப் போக்க அங்கே நீரைக் கொண்டு வந்து தடாகம் அமைப்பதற்காக சான்ட் ரோமா ( Sant Roma) என்ற நகர், திட்டமிடப்பட்டு வெள்ளத்தால் மூழ்கடிக்கப் பட்டது. அப்போது அந்த ஊரில் 1200 பேர் குடியிருந்தார்கள். அவர்களை அவசரமாக வெளியேற்றினார்கள். அந்த நகரம் முழுவதும் நீரில் முழ்கியபோது, பதினோராம் நுற்றாண்டைச் சேர்ந்த, பிரசித்தமான ஒரு கல்லினால் கட்டப்பட்ட தேவாலயமும் முழ்கியது. எல்லா கட்டடங்களும் முற்றாக மூடப் பட்டாலும் தேவாலயத்தில் மணிக் கோபுரம் மட்டும் வெளியே தெரிந்தது.





ஆனால் அண்மையில் 2008 ஆம் ஆண்டு , சுமார் 50 வருடங்களின் பின் பூமி வெப்பமானதால் ஏற்பட்ட அதீத வரட்சியினால், அந்தப் பிரதேசம் குடிக்கத் தண்ணீர் இல்லாத அளவுக்குப் பாதிக்கப் பட்டது. அப்போது அருகிலிருந்த அணை வற்றியதால் கொஞ்சம் கொஞ்சமாக இந்தத் தேவாலயம் வெளிப் பட்டது. சித்திரை மாதம்( 2008 ) முழுதாக வெளிவந்ததால் ,அந்தக் காட்சியைக் காண உல்லாசப் பயணிகள் படையெடுத்தனர்.





தொலைக் காட்சியில் இந்தச் செய்தியை ஒலி பரப்பி தேவாலயம் வெளிவந்ததை எண்ணியும், உல்லாசப் பயணத் துறை விரிவடிந்ததை நினைத்தும் மகிழ்வதா? அல்லது அங்கே கப்பல்களில் வந்திறங்கிய குடிநீர் போதாமல் மக்கள் படும் அவஸ்தையை நினைத்து கலங்குவதா? என்ற தெரியவில்லை என்றார்கள்.
மொத்தத்தில் இது சொர்க்கமா? நரகமா? என்று தெரியாமல் அங்குள்ள மக்கள் கலங்கினார்கள்.
ஆனால் இப்போ தண்ணீர் தடாகங்கள் கட்டப் பட்டு குடிநீர் பிரச்சனை தீர்க்கப் பட்டு விட்டது. தேவாலயமும் முற்றாக வெளிப் பட்டுள்ளது.











காதலர் தினமும் பறவைகளும் ....



















ஏனோ தெரியவில்லை. காதலுக்கும் பறவைகளுக்கும் அந்தக் காலத்திலிருந்தே நெருங்கிய தொடர்பிருக்கிறது . கல்யாணப் பத்திரிகையில் இரண்டு அன்னப் பட்சி மோதிரத்தைக் கவ்விச் செல்லும் படமும், காதலர் தின வாழ்த்துகளில் பறவைகள் பறப்பதும் முத்தமிடுவதுமான படங்களும் பார்த்து எமக்குப் பழகி விட்டது.
ஆனால் ஐரோப்பிய தேசங்களில் காதலர் தினத்தன்று ஒரு கல்யாணமாகாத பெண் முதன் முதலாகக் காணும் பறவை அவளுக்கு வரப் போகும் கணவன் எப்படிப் பட்டவன் என்பதைச் சொல்லும் என்று பழங் காலத்தில் நம்பப் பட்டதாம். அதனால் பெண்கள் எந்தப் பறவைகள் எந்தப் பகுதியில் இருக்கும் என்பதை ஓரளவு ஊகித்து பறவைகளைத் தேடித் போவார்களாம். இவர்கள் இப்படிப் பறவைகளைத் தேடித் போவார்கள் என்பதை அறிந்த ஆண்கள் இவர்களைப் பார்க்கப் புறப்படுவார்களாம். அனேகமாக காட்டுப் பகுதிகளைத் தவிர்த்து நதிக் கரையில் தான் பெண்கள் பறவைகளைத் தேடினார்களாம். அதிலுள்ள ரகசியத்தைக் கீழே படியுங்கள்.


GOLDFINCH
இந்தப் பறவையைக் கண்டால் கணவர் தனவந்தராக இருப்பாராம். ஆனால் கொடூரமான குணமுள்ளவராக இருப்பாராம்.








BLACKBIRD 
பரிசுத்தமான மனமுள்ளவராகவும் , சமூக சேவை 
செய்பவராகவும்
 இருப்பாராம்.








CANARY


கணவர் டாக்டராக இருப்பாராம்.












BLUEBIRD


அருகிலுள்ள அனைவரையும் சிரிக்க வைக்கும் ஆற்றல் படைத்தவராக நகைச்சுவையுள்ளவராக இருப்பாராம்.





DUCK

வாழ்க்கையை ஆழமாக உணர்ந்து அழகாக நடத்துபவராக இருப்பாராம்.







BIRDS OF PREY

கணவர் அரசியல் வாதியாகவோ ,வர்த்தகராகவோ அல்லது ஒரு தலைவராகவோ இருப்பாராம்.






GULL

இதன் இறகுகள் ஆகாய விமானத்தை நினைவு படுத்துவதாலோ என்னவோ , கணவர் தொடர்ந்து பிரயாணம் செய்பவராகவும் ,அமர்ந்து கதைக்க நேரமில்லாதவராகவும் இருப்பாராம்.







ROBIN



மீனவனாகவோ, நீர்ப் படையைச் சார்ந்தவராகவோ அல்லது ஏதாவதொரு நீர் சம்பத்தப் பட்ட தொழில் செய்பவராக இருப்பாராம்.







SPARROW

மரம் வெட்டுபவராகவோ, தோட்டக் காரராகவோ ஏதோ மரத்துடன் சம்பத்தப் பட்ட வேலை செய்பவராக இருப்பாராம்.





PIGEON


கணவர் தான் சின்ன வயதில் எங்கே இருந்தாரோ அந்த இடத்திலே திரும்பவும் போய் வாழும் நோக்கத்திலேயே இருப்பாராம்.







KINGFISHER

பரம்பரையாகவோ , தானாகவோ சேர்த்த செல்வத்தைத் தாராளமாகக் கொண்டு வருவாராம்.









WOODPECKER

இந்தப் பறவை கண்டால், இந்த ஜென்மத்தில் கல்யாணமே கிடையாதாம்.









DOVE

அன்பானவராகவும் இனியவராகவும் வாழ்க்கை முழுக்க இருப்பாராம். அதனால் பெண்கள் இந்தப் பறவையைக் காண்பது அதிஸ்டம் என்று கருதினார்களாம்.





இப்போது கூட இந்த மரபு வழியினால் பறவை பார்க்கச் செல்வது வழக்கத்திலிருக்கிறதாம். ஆண்கள் பலர் இப்படி பறவை பார்க்கச் சென்ற நேரத்தில் தான், காதலர் தினத்தன்று , தங்கள் மனைவியரைச் சந்தித்தார்களாம். உள்ளூர் தினப் பத்திரிகையொன்றில் படித்தேன்.

ஆமா, எங்க ஊரில் வெளியில் வந்தால் காக்கா தானே தெரியும். பரவாயில்லையே ! ஒரு மரக்கொத்தியைப் பார்த்து கல்யாணமே கிடையாதோ என்று கவலைப் படுவதை விட , ஒரு காக்கா பார்த்து சமூக சேவை செய்திட்டுப் போகலாம் . நீங்க என்ன சொல்றீங்க? இதில உள்ள பறவைகளைப் பற்றி மட்டும் தான் எனக்குத் தெரியும். இங்கே வந்து மயில் கண்டால் எப்பிடி கணவர் வருவார் என்று மடக்கிக் கேள்வி கேட்கக் கூடாது. இப்பவே சொல்லிட்டேன்.

No comments:

Post a Comment