Friday 6 May 2011

எதிர்காலம் பற்றிச் சொல்கிறார்கள்!


பிரத்தியேக மனநிலை மருத்துவம்


ஹென்றி மார்க்ஹம் ( Henry Markham ) என்ற விஞ்ஞானி இப்போதுசுவிற்சர்லாந்தில் மூளை சம்பந்தமான ( Blue Brain Project ) ஒரு ஆராய்ச்சியாளராக இருக்கிறார். இவர் 2020 ஆம் ஆண்டுக்குப் பின்னர் மனோதத்துவ மருத்துவர்கள் அவசியமில்லை என்கிறார். எவரும் கணினியில் தங்கள் மூளையின் தொழிற்பாட்டை அவதானித்து ,அவர்களின் நடவடிக்கைக்கான காரணத்தையும் அதற்கான தீர்வுகளையும் கண்டறிந்து தங்களைக் குணப் Marபடுத்த முடியும் என்கிறார். இது நடை முறையில் சாத்தியமா?
பெண்ணாதிக்கம்


ரய்மொந்த் ( Martin Raymond ) என்பவர் தொழிலதிபர்களுக்கு ஆலோசனை வழங்கும் ஒரு கம்பனிக்கு ( Business Consultancy Future Laboratory) பொறுப்பாளராக வேலை செய்கிறார். இவரது கருத்துப் படி 2020 ஆம் ஆண்டில் 53 வீதமான மில்லியனயர் பெண்களாக இருப்பார்களாம். அதுமட்டுமில்லாமல் பெண்களால் நிர்வகிக்கப் படும் கம்பனிகள் உலகளவில் முன்னணி வகிக்கும் என்றும் அதிக இலாபகரமானவையாக இருக்கும் என்றும் அடித்துச் சொல்கிறார். ... கவனிக்கவும். இதைச் சொன்னவர் மார்ட்டின் ரய்மொந்த் . நானல்ல.

பூமிக்கு வெளியில் உல்லாசப் பயணம்


பிரித்தானிய தொலைபேசிக் கம்பனியின் ஆராய்ச்சிப் படி 2017 ஆம்ஆண்டிலிருந்து மக்கள் விண்வெளியில் elevators மூலம்சந்திரனிலுள்ள கிராமங்களுக்கு உல்லாசப் பயணங்களை ஆரம்பிப்பார்களாம். 2040 ஆம் ஆண்டில் அது சர்வ சகஜமாகி விடுமாம். தலை 'கிர்ர்' என்கிறதே !

ஓட்டுனர் இல்லாமல் கார் ஓடுமாம்.


2030 ஆம் ஆண்டளவில் satelite கொன்றோல் மூலம் வாகனங்கள் ஓட்டப் படுமாம். காரில் ஏறியிருந்தால் போக வேண்டிய இடத்துக்கு அது உங்களை சேமமே கொண்டு சேர்க்குமாம். உலக கால நிலைமை இன்னும் இருபது வருடங்களில் மோசமாகி விடுமென்பதால் ,அப்போது இந்த வகையில் பயணிப்பது தான் வாகன விபத்துகளைத் தடுக்கும் ஒரே வழியாம்.

No comments:

Post a Comment